CLOCK

The mind is everything. What you think you become.” Swami vivekanantha

My photo
chennai, tamil nadu, India
Nothing is permanent in this world - not even our troubles. CHARLIE CHAPLIN

Thiru Kural

Saturday 20 August 2011

ஊழலை ஒழிக்க ஒரே வழி அண்ணா ஹசாரே அரசியலில் இறங்க வேண்டும்

My India
Anna Hasare
 நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க கடுமையான `ஜன் லோக்பால்' மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்.




நண்பர்களே ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டம் பற்றி மாற்றுக் கருத்து சொல்பவர்களை கூட ஊழலை ஆதரிப்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள் ஹசாரேவின் ஆதரவாளர்கள்? ஏன் இவ்வளவு நாளும் ஊழலுக்கு எதிராக யாருமே போராடவில்லையா? இவருடைய போராட்டத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? கேட்டால் நல்லதை யார் செய்தால் என்ன என்று தயாராக ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள்? யார் என்றே தெரியாத இவருக்கு ஆரம்பத்தில் கூட்டம் கூடியதற்கு பின்னால் குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களும், ஒரு சில பத்திரிக்கைகளும் உள்ளது என்று சந்தேகப்படுவதில் என்ன தவறு 
உள்ளது? இந்த அரசாங்கத்திற்கு மக்களின் மூலம் ஒரு நெருக்கடியை கொடுப்பதுதான் இவரை சார்ந்தவர்களின் நோக்கமே தவிர இதில் உண்மையான சமுக அக்கறை இல்லை. இப்படி சொல்வதற்கு தகுந்த காரணங்கள் உள்ளது. இவரின் பின்னால் நிற்கும் அரசியல்வாதிகளை விடுங்கள் அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள்? பல கோடிகளை கருப்பு பணமாக பெற்றுக்கொண்டு அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் இருக்கும் நடிகர்கள் பட்டாளம் இவர் பின்னால். பொது இடங்களில் அடிப்படை நாகரிகத்தை கூட பின் பற்றாத எத்தனையோ பேர் அன்னா ஹசாரே பின்னால் ஏன், எப்படி என்று ஒருவார்த்தை கூட கேட்க இயலாமல் சாவி கொடுத்த பொம்மை மாதிரி நின்று கொண்டு சொன்னதையே சொல்கிறார்கள்? மக்கள் ஏன் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்படுகிறார்கள்? தங்களுக்கு சமுக அக்கறை உள்ளது என்று காட்டிக்கொள்ளவா? 
பிரதமர், மற்றும் உயர் அதிகாரிகளை விசாரணை அமைப்புக்குள் கொண்டுவந்துவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? இவர்களை விசாரிக்க வேண்டாம் என்றோ, ஊழலுக்கு தண்டனை வேண்டாம் என்றோ சொல்லவில்லை? வார்டு கவுன்சிலர் செய்யும் ஊழலில் ஆரம்பித்து அரசாங்காத்தின் அடிப்படை ஊழியன், நிறுவனங்கள் முதற்கொண்டு செய்யும் ஊழல்களை சரி பண்ணுவதற்கு என்ன வழி உள்ளது? இன்னும் சொல்லப்போனால் இவர்கள் செய்யும் ஊழல்தான் சாதாரன மக்களை பாதிப்பவை? அன்னா ஹசாரே போன்றோருக்கு அதைபற்றி எல்லாம் கவலை இல்லை? ஊழலின் அடிப்படையை கண்டறியாமல் எத்தனை பேரை விசாரிப்பார்கள், எத்தனை பேருக்கு தண்டனை கொடுப்பார்கள்? சரி ஊழல் எப்படி உருவாகுகிறது? நடுத்தர மக்களின் வாழ்க்கை முறைக்கும், பணக்காரர்களின் வாழ்க்கை முறைக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை போராட்டத்தின் ஒரு பகுதிதான் ஊழல். இன்று ஊழல் இல்லாத நாடு இல்லை. ஆனால் நம் நாட்டை போல் இல்லாமல் குறைவாக இருக்க காரணம் தனி நபர் வருமானம் மிக அதிகமாக இருப்பதுதான். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மிக அதிகம். இங்கு Economical Balance இல்லை. 
அதற்காக நான் கம்யூனிஸ்ட் வழியை பின் பற்ற சொல்லவில்லை, பணக்காரர்களும் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன திட்டம் உள்ளது? தனி நபர் வருமானம் உயர என்ன வழி இருக்கிறது? இங்கு ஒரே கல்வி, ஒரே வேலை முறைதான் ஆனால் இதை அரசாங்க ஊழியனாக இருந்து செய்தால் பல ஆயிரம் சம்பளம், தனியாரில் செய்தால் சில ஆயிரங்கள் மட்டும்தான்.அரசாங்க பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தினால் ஏன் தனியார் பள்ளிகளில் நன்கொடை கொடுத்து குழந்தைகளை சேர்க்கவேண்டும். இது மாதிரி எல்லாதுறையிலும், எல்லா இடத்திலும் ஏற்றதாழ்வுகள் அதிகம். கொடுப்பவனும், வாங்குபவனும் ஒத்து போய்விட்டால் எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியுமா? நம் மக்கள் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்கிறார்கள் இப்படி சொல்லிவிட்டு ஒட்டு போடுவது உங்கள் கடமை என்று தேர்தல் நேரத்தின் பொது மற்றவர்களிடம் சொல்லி தன்னை ஒரு கடமை தவறாத, விவரம் தெரிந்த இந்திய குடிமகனாக காட்டிக்கொள்கிறான்? ஊழல்வாதிகள் என்று சொல்லிவிட்டு ஓட்டும் போடுகிறோமே என்று நீ ஏன் யோசிக்கவில்லை? ஒட்டு போட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்களாம், ஆனால் அந்த பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையாம் அன்னா ஹாசாரே போன்றவர்களுக்கு? நம் ஆட்கள் அரசியல் பதவி என்று வந்தவுடன் ஊழலில் திளைக்கிறான்? நமக்கு ஜனநாயக முறை கண்டிப்பாக தேவை அப்படியிருக்கிறபோது வேறு விதமாக யோசிக்கவேண்டியதுதானே? 
மேலை நாடுகளில் இருப்பது போன்று தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை திரும்ப பெரும் முறைக்காக சட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கலாமே? வேறு வழி இருந்தால் அதையும் செய்யலாம், அதைவிட்டு விட்டு அன்னா ஹசாரே போன்றவர்கள் புதிது புதிதாய் வருவார்கள் இவ்வளவு நாள் தூங்கிவிட்டு இப்போது ஞாபகம் வந்தவராய் எதையாவது சொல்வார் நீங்களும் ஆமாம், ஆமாம் என்று சொல்லாதீர்கள்? 

அண்ணா ஹசாரே யால் லோக்பால் சட்டம் தான் கொண்டுவர முடியும் ..அதனால் எந்த பயனும் இருக்க போவது இல்லை .. காங்கிரஸ் ஆட்சி சரியில்லை தான் ஆனால் வேறு யாரும் இல்ல .. இது ஒரு பிஜேபி யின் தந்திரம் தான் .. இன்னும் 3 ஆண்டுக்கு ஒன்றும் செய்ய முடியாது , அதற்கு அடுத்த தேர்தல் வந்தாலும் ராகுல்காந்தி வந்து விடுவர் பிறகு ஒன்னும் செய்ய முடியாது கிட்ட தட்ட 8  வருடமாவது  பிஜேபி காத்திருக்க வேண்டும் ..
அதற்கு அவர்களுக்கு கிடைத்த சூழ்ச்சி அல்லது தந்திரம் தான் இந்த அம்பு ...
ஊழலை இவர் ஒழிக்க ஒரே வழி >>>>>
அன்னஹசரே அரசியலி எடுபட வேண்டும் இப்பொழுது எந்த கட்சியில் இருந்தும் யாரையும் சேர்க்க கூடாது  .. எந்த கட்சி ஆதரவும் பெற கூடாது
வெற்றி பெற்று அவர் ஊழலை ஒழிக்க முடியும் 
நான் ஒட்டு போடா தயார் எனது குடும்பத்தையும் ஒட்டு போடா வைப்பேன்
எனது நண்பர்களையும் ... நான் அவரை நம்புகிறேன் , கொள்கைகளையும்
ஆனால் ஒரே இரவில் ஊழலை ஒழிக்க மந்திரம் இருந்தால் தான் முடியும் ..
லோக்பால் ய் ஜோக் பால் ஆகிவிடுவார்கள்  

அண்ணா ஹசாரே அரசியலில் இறங்கித்தான் இதை சரி செய்ய முடியும்  நிச்சயமாக 

No comments:

Post a Comment